மக்காச்சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

0
15

மக்காச்சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மக்காச்சோளத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவர். இதில் பலவித சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மக்காச்சோளம் ஓரு தானிய பயிர் வகையாக உள்ளது. நாட்டு மக்காச்சோளத்தை முன்னோர்கள் உணவாகவும் பயன்படுத்தி உள்ளனர். மேலும் அழுகுக்காக குளிக்கும் போது கள்ளமாவை பயன்படுத்துவது போல சோளத்தையும் பொடி செய்து உடலுக்கு பூசி குளித்து உடலை நன்றாக பேணியுள்ளனர்.

இந்த சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.  சூரிய ஓளியால் சேதமாகும் முகத்தை சரி செய்யவும் சோள எண்ணெய் மற்றும் சோள மாவினை முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தலாம். இப்படி எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ள சோளத்தில் உள்ள நன்மைகளை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

இதையும் கவனியுங்கள்: வெண்டைக்காயின் நன்மைகளும் வெண்டைக்காய் தோசை செய்முறையும்

மக்காச்சோளம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மக்காச்சோளத்தில் உள்ள சத்துக்கள்:

சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன. தயாமின் மற்றும் நியாமின் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. போலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் நிறைந்து உள்ளது. சோளம் வைட்டமின் சி மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட் கொண்டவை. இது சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

மக்காச்சோளத்தில் உள்ள நன்மைகள்:

  • அழுகு சாதனப் பொருட்களின் மூலப்பொருட்களில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.
  • உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. ரத்த சோகை வருவதையும் தடுக்கிறது.
  • நிரிழிவு நோயை கட்டப்படுத்த உதவுகிறது. சோளம் உண்பதால் இனசுலின் அளவு அதிகரிக்கிறது.

  • மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக உறுதி செய்வதால் உடல் எப்போதும் ஆற்றலோடு இருக்க உதவுகிறது.
  • கருவுற்றிருக்கும் பெண்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி சோளம் உண்பதால் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • உடல் எடை அதிகரிக்க விருப்புபவர்கள் இதனை உண்ணலாம். 100 கிராம் உள்ள சோளத்தில் 365 கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
  • கண்களின் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு உறுதிணையாக இருக்கின்றது.
  • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கோதுமையை காட்டிலும் சோளம் நல்ல பயனுள்ளதாக உள்ளது.

இப்படி எண்ணற்ற பயன்களை தன்னிடத்தில் பதுக்கி வைத்துள்ளது சோளம் இதனை பச்சையாகவும் வேகவைத்தும் உண்ணலாம். எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளாமல் சிறிதளவு எடுத்துக் கொள்வது எந்தவித பாதிப்பையும் ஏறப்படுத்துவதில்லை. இந்த தானிய வகையான சோளத்தை அனைவரும் சாப்பிட்டு உடல்நலத்தை நன்முறையில் பேணுவோம்.

இது போன்ற தகவல்களை பெற மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், விளையாட்டு, செய்திகள், தமிழ் இலக்கியம் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here