இந்திய தூதரக ஊழியருக்கு 48 மணி நேர கெடு விதித்த பாகிஸ்தான்

இஸ்‌லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் சுர்ஜித் சிங் வெளியேற வேண்டுமென பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. 48 மணி நேரத்‌திற்குள் சுர்ஜித் சிங் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதர் கவுதம் பம்பா‌வாலேவிடம் தெரிவித்துள்ளது.

சுர்ஜித் சிங் தூதரக ஊழியர்களுக்கான விதிகளை மீறி செயல்பட்டதாகவும் எனவே அவர் விரும்பத்தகாத நபராக அறிவிக்‌கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதரக ஊழியருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக இது கருதப்படுகிற‌து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares