உங்கள் ஊருக்கு போக எங்கே பஸ் ஏறனும்னு தெரிஞ்சுக்கனுமா?

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்காக கோயம்பேடு உள்பட சென்னை நூறடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகேயும், தாம்பரம் சானட்டோரியம், அண்ணாநகர் (மேற்கு), பூந்தமல்லி ஆகிய 5 இடங்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் ஊருக்கு செல்ல இவற்றில் நீங்கள் எந்த பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.

*செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் அனைத்து தமிழக, ஆந்திரா பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு) பஸ் நிலையத்திலிருந்து புறப்படும்.

*கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

* திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம் பஸ் நிலையத்திலிருந்து செல்லும்.

* பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து புறப்படும்.

* மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, செங்கானாச்சேரி, கொட்டாக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாக்குமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம் கோவை, எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.

பழக்க தோஷத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நேராக சென்று விடாமல் உங்கள் ஊருக்கு செல்ல தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள எந்த பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டு புறப்படுங்கள்.

பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தீப ஒளிவீச வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares