உலகக்கோப்பை கபடி: ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

உலகக்கோப்பை கபடி போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அஹமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி இறுதிப் போட்டியில் இந்தியா- ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன் முதல் பாதியில் இந்திய அணி பின்தங்கி இருந்தது. ஆனால் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் பாதியில் இந்திய அணி வீரர்கள் புள்ளிகளை வேகமாக குவித்து வந்தனர்.

இதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடர்ந்து 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, இதுவரை 8 முறை உலகக்கோப்பை கபடியில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares