கண்ணாடி கூரைகளுடன் ரயில் பெட்டிகள்…ரயில்வேத் துறை புதிய திட்டம்

சுவிட்சர்லாந்தில் இருப்பது போன்று கண்ணாடி கூரைகளுடன் புதிய ரயில்பெட்டிகளை உருவாக்க ரயில்வேத் துறை முடிவெடுத்துள்ளது.

பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் உருவாக்கப்பட இருக்கும் இந்த பெட்டிகள் இந்திய ரயில்களில் இணைக்கப்பட இருப்பது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக பேசிய ஐஆர்சிடிசி அமைப்பின் தலைவர் ஏ.கே.மனோச்சா, சுற்றுலா மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இதுபோன்ற ரயில் பெட்டிகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தவகை பெட்டிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்த ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மூன்று ரயில்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள ரயில்வேத் துறை, அவற்றில் ஒரு பெட்டியை காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஒரு பெட்டியை விசாகப்பட்டினத்தின் அரக்கு பள்ளத்தாக்கு பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் இணைக்க முடிவு செய்துள்ளது. கண்ணாடி மேற்கூரைகளுடன் ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares