காவிரி விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் இன்று முறையீடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தமிழகத்துக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவரை நேரில் வலியுறுத்த, மக்கள் நலக்கூட்டணி‌ தலைவர்கள் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர்கள், குடியரசுத் தலைவரிடம் காவிரி விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares