கே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படம் டிசம்பரில் வெளியீடு?!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம், டிசம்பரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தனர்.

‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பெயர் வெளியிடப்படாத நிலையில் படப்பிடிப்பு சென்னை, மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 70% முடிந்தது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவன ஊழியராக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் 6 படங்கள் வெளியாகியது. இப்படம் டிசம்பரில் வெளியானால், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 7-வது படமாக இப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares