சதுரங்க வேட்டை 2 ‘- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி!

தமிழ் திரையுலகில் 2014ஆம் ஆண்டு சக்கை போடு போட்ட படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கவுள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது திரிஷா கதாநாயகியாக இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிக்க சதுரங்க வேட்டையை இயக்கிய ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை இயக்குனர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சதுரங்க வேட்டை முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை வைத்து எவ்வாறு ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என்பது குறித்து கதையம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares