சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை… நடிகை ரம்பா ஜீவனாம்சம் கேட்டு வழக்கு

தனது கணவர் இந்திரகுமார் தமக்கு மாதந்தோறும் ‌இரண்டரை லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிடக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

கனடாவில் உள்ள தனது கணவர் இந்திரகுமார் தன்னுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் பராமரிப்பு செலவுக்கு மாதந்தோறும் இரண்டரை லட்சம் ரூபாய் வழங்குமாறு தனது கணவருக்கு உத்தரவிடக் கேட்டு மேலும் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தற்போது, தான் சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை என்றும், எனவே, தனக்கு தேவையான செலவுகளுக்கும், இரு மகள்களின் பராமரிப்பு மற்றும் மருத்துச் செலவுகளுக்காக இடைக்கால பாரமரிப்பு செலவிற்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நடிகை ரம்பா கேட்டுள்ளார். இந்த மனு, பிரதான வழக்குடன் சேர்த்து டிசம்பர் 3-ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares