சூர்யாவின் எஸ்-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடித்துவரும் எஸ்-3 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எஸ்.3’. சூர்யா – ஹரி கூட்டணியில் உருவான ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ரிலிஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. டிசம்பர் 16-ந் தேதி ‘எஸ்-3’ படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் வெளியிடவுள்ளனர்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares