காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காக மத்திய அரசை கண்டித்து சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். பெரம்பூர் ரயில்வே ஆடிடோரியத்தில் இருந்து ரயில் நிலையம் வரை மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ‘தமிழகத்திற்கு துரோகம் இழைத்த மத்திய அரசு’ என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஸ்டாலின் மற்றும் திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.