சென்னை சின்னமலை-விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை: இன்று தொடக்கம்

சென்னை சின்னமலை – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில்சேவை இன்று தொடங்கப்படவுள்ளது.

 

 

இதனை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். மேலும், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி உள்பட 6 மெட்ரோ நிலையங்கள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளன. விமானநிலையத்தில் நடைபெறும் தொடக்கவிழாவில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் சுரங்கப்பாதை வழியே கடந்து செல்லும் முதல் மெட்ரோ ரயில்தடமாக இந்த வழித்தடம் உள்ளது. இந்த பாதையில் காலை 6 மணி முதல் இரவு 10.20 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவை மூலம், பயணநேரம் குறைவதுடன் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ திட்டத்தின் முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஆண்டு முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares