டார்ஜான் பாணியில் ஆர்யா மிரட்டும் கடம்பன் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடித்துள்ள கடம்பன் பட டீசர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

’மஞ்சப்பை’ ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் கடம்பன். இந்த படத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்ளும் பழங்குடியின இளைஞராக ஆர்யா நடித்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரேசா நடித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை ஈட்டாததால், இந்த படத்தை அவர் மிகவும் எதிர்நோக்கியுள்ளார். கடம்பன் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ர் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். யுவன் இசையில் உருவாகியுள்ள படம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares