‘டியர் ஒபாமா’ வைரலாகும் 6வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்

சிரியாவில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நடந்த வான்வழி தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக 6வயது அமெரிக்க சிறுவன், அதிபர் ஒபாமாவிற்கு கடிதம் எழுதியுள்ளான். மிகவும் உருக்கமான அந்த கடிதத்தில் சிறுவன் அலெக்ஸ் கூறியிருப்பதாவது: ‘டியர் அதிபர் ஒபாமா சிரியாவில் காயங்களுடன் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சிறுவனை நான் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். அவன் எங்கே, அவனை அழைத்து வாருங்கள். எனது தங்கை கேத்ரினாவும், நானும், தம்பிக்காக (ஓம்ரான்) வண்ணத்து பூச்சிகள் மற்றும் பலூன்கள், பட்டாசுகளை சேகரித்து வைத்துள்ளோம். ஒம்ரானுக்கு எனது நண்பர்களை அறிமுகப்படுத்துவேன். நாங்கள் அனைவரும் அவனுடன் விளையாடுவோம். எங்களது பிறந்த நாள் பார்ட்டிகளில் பங்கேற்க அவனை அழைப்போம். அவனுக்கு மற்றொரு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொடுப்போம். அவனுக்காக ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் 10 கடிதங்களை படிப்பதை வழக்கமாக வைத்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பார்வைக்கு இக்கடிதத்தை அதிகாரிகள் வைத்துள்ளனர். அதனை படித்த ஒபாமா மிகவும் மனம் உருகினார். அகதிகள் குறித்து அலெக்ஸின் மூலமாக அனைத்தையும் கற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார். இதுவரை 80 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 1,50,000 பேர் இந்த வீடியோவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares