தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு கார், வீடு : மகிழ்வித்த முதலாளி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி சவ்ஜிபாய் தொலாக்கியா தனது நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டும் கார் மற்றும் வீடுகளை பரிசாக வழங்கி உள்ளார். ஆயிரத்து 665 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவர் கார் மற்றும் வீடுகளை வழங்கியிருக்கிறார். ஆண்டு தோறும் விலை உயர்ந்த பொருட்களை தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு வழங்கி வரும் சவ்ஜிபாய் தனது நிறுவன பணியாளர்களின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சவ்ஜிபாய் கூறுகையில், சிறப்பாக பணியாற்றிய 1,700 ஊழி‌யர்களை தேர்வு செய்தோம். அவர்களுக்கு தரப்பட்ட கார் அல்லது வீட்டிற்கான கடன் தவணையை நாங்களே செலுத்திவிடுவோம் என்றார். இந்த பரிசு குறித்து வைர நிறுவன ஊழியர் வினோத் ராவல் கூறுகையில், எங்கள் முதலாளி‌ சவ்ஜிபாய் தந்த தீபாவளி பரிசால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்களுக்கு கார் கிடைத்துள்ளது. சவ்ஜிபாய் தந்த பரிசால் தீபாவளி மகிழ்ச்சி இரட்டிப்பாகி‌விட்டது என்றார்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares