பணத்திற்காக அரபு நாடுகளில் மனிதர்கள் விற்பனை: திருச்சியில் 3 பேர் கைது

பணத்திற்காக அரபு நாடுகளில் மனிதர்களை விற்பனை செய்யும் திருச்சியை சேர்ந்த 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஃபீக் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த கொம்புதி கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முத்து கருங்கு,மகேந்திரன் மற்றும் முகமது சுகேல் ஆகிய மூவரைக் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தில் இருந்து 5க்கும் மேற்பட்டவர்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares