பாகுபலி 2 படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் மும்பையில் வெளியீடு..!

பாகுபலி 2 படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பாகுபலி உலக அளவில் வசூலை அள்ளியது. இதையடுத்து சினிமா உலகையே பிரமிக்க வைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது போன்ற பல சஸ்பென்ஸ்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

ஜியோ நிறுவனம் மற்றும் ஸ்டார் இணைந்து நடத்தும் மும்பை திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் அக்டோபர் 22- ஆம் தேதி படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares