‘புரியாத புதிர்’- ஆக மாறிய விஜய்சேதுபதியின் மெல்லிசை

விஜய்சேதுபதி, காயத்ரி இணைந்து நடித்துள்ள மெல்லிசை படத்தின் தலைப்பு ‘புரியாத புதிர்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படம் நவம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் தெரிவிக்கையில், மெல்லிசை படத்தின் தலைப்பு ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டுள்ளது. வணிக நோக்கங்களுக்காக இவ்விதமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு மூடுபனி, மற்றும் நெற்றிக்கண் போன்ற தலைப்புகள் பரிந்துரைக்கப்பட்டன. எனினும் இது ஒரு த்ரில்லர் படம் என்பதால் தலைப்பு அதற்கு பொருத்தமாக வைக்க திட்டமிட்டு ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே இதன் தலைப்பு மூடுபனி என வைக்கப்பட்டு மெல்லிசை என மாற்றம் செய்யப்பட்டது. எனவே மூன்று தலைப்புகளில் எது பொருத்தமானது என தேர்வு செய்ய தயாரிப்பாளரை அணுகினோம். அவர் தான் இப்படத்திற்கு ‘புரியாத புதிர்’ என தேர்வு செய்தார். மேலும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும். விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares