பெண்ணுக்குள்ளும் எல்லைகள் கடந்த கனவுகள் இருக்கும்: ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள ” பி த பிட்ச்… ஸ்ருதி அன்ப்ளஸ்டு” எனும் விடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு எனது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது, எங்களது உரையாடல்களின் இடையே பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ஒன்றை கவனித்தேன். அது ஏதோ உறுத்தலாகவே இருந்தது. என்னை தூங்கவிடவில்லை. அந்த வார்த்தை என்னவென்றால் “பிட்ச்”- பழமைகளை உடைத்தெறிந்து தன் கனவுகளை நோக்கிப் பறக்கத்துடிக்கும் பெண்ணுக்கு இந்த சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். இவ்வாறாக தொடங்குகிறது அந்த விடியோ பதிவு.

ஒரு இலக்கை நோக்கி பறந்துகொண்டிருக்கும் என்னை தடுப்பதற்கான ஏற்பாடாக இது இருந்தால் நான் அவ்வாறு அழைக்கப்படுவதை பெருமையாகவே கருதுகிறேன். பெண் என்பவள் புனிதமானவள். தனது குழந்தைகளுக்காக தூக்கத்தை தொலைத்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் எல்லைகள் கடந்த கனவுகள் உண்டு என்று அதிரடியாக பேசி நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

பொதுவாக சமுதாயத்தில் பெண்களை இழிவுப்படுத்தி பேசும் ஒரு ஆபாச சொல்லுக்கு, பெண்ணின் வலிமையைக் கொண்டு புதிய பொருளை உணர்த்தும் வகையில் கம்பீரமாக, மிரட்டலான வசனங்களை எழுதி நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அவரது இந்த முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares