மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் நாளை தகர்க்கப்படுவது எப்படி?

சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் 11 மாடி கட்டட‌ம் நாளை இடிக்கப்பட உள்ளது. வெறும் 10 நொடிகளில் வெடி மருந்து வைத்து இந்த கட்டடம் தகர்க்கப்பட உள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெய்த கனமழையின்போது மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்சி 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதனையடுத்து, மழையின் போது இடிந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதயைடுத்து, இந்தக் கட்டடம் நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது.

கட்டடம் தகர்க்கப்படுவது எப்படி?

11-மாடி கொண்ட இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள அனைத்து தூண்களில் 3 துளைகள் போட்டு வெடி மருந்துகள் நிரப்பப்படும். இதேபோன்று 5-ஆவது தளத்தில் உள்ள தூண்களிலும், துளைகள் போட்டு வெடி மருந்துகள் நிரப்படுப்படும். இதே முறை தரைத்தளத்திற்கு கீழ் உள்ள தளத்திலும் பின்பற்றப்படும். முதலில் தரைத்தளத்திற்கு கீழ் உள்ள தளத்தின் உள்ள மருந்துகள் இயக்கப்பட்டு வெடிக்க வைக்கப்படும். அடுத்த 3 நொடிகளில் தரைத்தளத்தில் உள்ள மருந்துகள் வெடிக்க வைக்கப்படும். அதனைத்தொடுத்து அடுத்த 3 நொடிகளில் 5-ஆவது தளத்தில் உள்ள மருந்துகள் வெடிக்க வைக்கப்படும். சுமார் 10 நொடிகளில் இந்த 11 மாடிக் கட்டம் முழுமையாக இடிக்கப்பட உள்ளது. கட்டடம் இடிந்து விழும் போது உள்நோக்கி இடிந்து விழும் வகையில் இந்த தொழில்நுட்பம் உள்ளது.

கட்டடத்தை சுற்றி சுமார் 100 மீட்டர் தொலைவிலுள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தனியார் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துள்ள அரசு, அவர்களை அங்கு தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. கட்டடத்திற்கு அருகிலுள்ள முக்கியமான சாலைகள் நாளை காலை முதல் மூடப்பட உள்ளது. மேலும் கட்டட இடிப்பால் அருகில் உள்ள வீடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் அதற்கு முழு பொறுப்பு ஏற்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை, காவல்துறை, சிஎம்டிஏ மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கட்டட இடிப்பு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்‌டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மவுலிவாக்கம் பகுதி பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மலிவுவாக்கம் பகுதியில் நாளை 12 மணி முதல் கட்டடம் இடிக்கும் வரை மின்தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares