முதலமைச்சர் பூரண குணமடைய தமிழக ஆளுநர், பிரதமர் மோடி வாழ்த்து.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீர்ச்சத்து குறைவு மற்றும் காய்ச்சல் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதாவின் காய்ச்சல் குணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை, தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் பூரண நலம் பெற பூங்கொத்து மற்றும் கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மக்களுடைய வாழ்த்து எப்போதும் உங்களுக்கு இருக்கும் எனவும் மக்களின் பிரார்த்தனை முதலமைச்சரை நலமுடன் வாழவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares