ரஜினியின் 2.0 டீஸர் அடுத்த மாதம் வெளியீடு ?

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘2.0’. நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், முக்கிய வேடத்தில் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, இப்படத்தின் டீஸர் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares