ராம்குமார் தற்கொலை தொடர்பாக மாஜிஸ்திரேட் 3 மணி நேரம் விசாரணை

ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக புழல் சிறை அதிகாரிகளிடம் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிதி 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார்.

காலை 9 மணியளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற திருவள்ளூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் தமிழ்ச் செல்வி, பிரேதபரிசோதனை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அது தொடர்பாக விபரங்களை பதிவு செய்து கொண்டபின் அவர் புழல் மத்திய சிறைக்குச் சென்றார். சிறை அதிகாரிகளிடம் சுமார் 11.20 மணியளவில் விசாரணையை தொடங்கிய மாஜிஸ்திரேட் தமிழ்ச் செல்வி, ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.

Ramkumar Died Committing Suicide

சிறை கண்காணிப்பா‌ளர் அன்பழகன், மருத்துவ அதிகாரி நவீன், தலைமைக் காவலர் பேச்சிமுத்து மற்றும் 5 கைதிகளிடமும் தனித்தனியாக 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர் விசாரணை நடத்தினார். இது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட குற்றவியல் நடுவர் இந்திராணியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பேரில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares