வடகிழக்கு பருவமழை: 20 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைக்குழு அமைப்பு

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்த 20 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள‌ப்பெருக்கு தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் இயற்கை பேரழிவுகளை தடுக்க நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி அரசாணையை தாக்கல் செய்தார். பேரிடர்களை தடுக்கும் பொருட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை குழுவின் தலைவ‌ராக வருவாய் மற்றும்‌ நிர்வாக துறை முதன்மை செயல‌ளர் சத்தியகோபால், உப தலைவராக வருவாய் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது‌.

இவர்களின் தலைமையில் அண்ணா பல்கலைகழகம், சென்னை ஐஐடி, திருச்சி என் ஐ டியை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் ஆகிய 18 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த குழுவின் முதல் கூட்டத்தை ஒரு வாரத்தில் கூட்டவும், நீர் நிலைகள் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 15 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares