விஷால் – சமந்தா இணையும் ‘இரும்புத்திரை’ பட ஷூட்டிங் ஆரம்பம்

புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் ஆரம்பமானது.

‘கத்திசண்டையை’ முடித்த விஷால் மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்ட‌ரி மூலம் ‘இரும்புத்திரை’ படத்தை தயாரிக்கவுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக இணைகிறார்.

விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா இதில் வில்லனாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டராக ரூபன் என ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக ‘இரும்புத்திரை’ உருவாக உள்ளது.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares