13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கமல்ஹாசனை பிரிகிறேன்: நடிகை கவுதமி

நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து பிரிந்து விட்டதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது: ‘எனது மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிந்து விட்டேன். எனது மகளுக்கு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்றால், இந்த பிரிவு அவசியம். கடந்த 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம் என்றாலும்‌, இந்த பிரிவு குறித்து 2 ஆண்டுகளாக யோசித்து வந்தேன்.

20 ஆண்டு கால நட்பில் கமல்ஹாசனிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். குறை சொல்வதோ அனுதாபம் தேடுவதோ என் நோக்கம் அல்ல.ஒரு ரசிகையாக கமல்ஹாசனின் வெற்றிகளை ரசிப்பேன்’ இவ்வாறு கவுதமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கவுதமியின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே இருவரும் பிரிவது குறித்து விவாதித்து தான் முடிவெடுத்தோம் என்று நடிகை கவுதமி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares