3 நாள் பயணமாக நேபாளம் செல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக வரும் 2-ம்‌ தேதி‌ நேபாளம் செல்கிறார்.

இந்தியாவிற்கும் அண்டை நாடான நேபாளவிற்கும் அண்மைக் காலமாக விரிசல்கள் இருந்து வரும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3 நாட்கள் பயணமாக வரும் 2-ஆம் தேதி நேபாளம் செல்கிறார். இப்ப‌யணத்தின் போது நேபாள அதிபர், பிரதமர் உள்ளிட்ட மற்ற முக்கிய தலைவர்களையும் சந்திக்கும் குடியரசுத் தலைவர் இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரும் செல்ல உள்ளனர்.

கடந்த 18 ‌ஆண்டுகளில்‌‌ இந்திய குடியரசுத் தலைவர் தற்போது முதல்முறை நேபாளம் செல்வதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares