வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!!

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது.

அதனால் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் உடல் சோர்வால் சாப்பிட்டு தூங்க மட்டும் தான் நேரம் உள்ளது. சிலருக்கு அந்த நேரம் கூட கிடைக்காது. ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை தமிழ் போல்ட் ஸ்கை பரிந்துரைக்கிறது.

இந்த அழகு குறிப்புக்களை சரியாக பின்பற்றி வந்தால், இயற்கையான அழகில் ஜொலிக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. சரி, இப்போது அந்த அழகு குறிப்புக்களைப் பார்ப்போமா!!

பொலிவான கண்கள் கண்கள் :

நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

முகத்தில் வளரும் முடி :

சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.
முகப்பரு :

சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

சரும சுருக்கம் :

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும சுருக்கம். இந்த சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

நெயில் பாலிஷ்

நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில் பாலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பாலிஷ் சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பாலிஷ் போட வேண்டும்.
ஹேர் ரிமூவல்:

அக்குளில் வளரும் முடியை ஷேவ் செய்யும் போது சோப்பு போட்டு ஷேவ் செய்யாமல், கண்டிஷனர் உபயோகித்து ஷேவ் செய்தால், ஷேவிங் செய்த பின்னர் சருமம் மென்மையாக இருக்கும்.

அழகான உதடுகள்

உதடுகளின் நிறம் அழகாக, அதே சமயம் இயற்கையான தோற்றத்தில் காணப்பட வேண்டுமெனில், ப்ரௌன், செர்ரி அல்லது நியூட் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லாவிட்டால், தினமும் உதட்டை தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போடாமலேயே அழகாக இருக்கும்

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares