தினேஷின் “ஒரு நாள் கூத்து”, ஆடம்பர திருமணம்..

Dinesh in Oru Naal Koothuஅட்டகத்தி தினேஷ் நடித்திருக்கும் “ஒரு நாள் கூத்து” படத்துடைய ரிலீஸ் பல மாதங்களாக தள்ளிபோய்க்கொண்டே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்துக்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்று தள்ளிவைத்தார்கள். ஆனால் அதற்கு பின்னர் ஒரு நாள் கூத்து படத்துக்கு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.

“விசாரணை” படத்துடைய வெற்றிக்கு பின்னர் தினேஷ் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் “ஒரு நாள் கூத்து” படத்துக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. திருமணத்துக்காக அதிக செலவு செய்யும் வழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். ஆனால், காமெடிக்கு அதிக முக்கியதுவம் இருக்குமாம். இந்த படத்தில் மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். இந்த படம் தினேஷூக்கு இன்னொரு வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் படக்குழுவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares