உங்களுக்கு அடர்த்தியான புருவம் வேண்டுமென ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

வில் போன்ற புருவம் சிறிய கண்களையும் ஓவியம் போல காண்பிக்கும். புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும் .

சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக மாற்ற முடியும்.

அதற்கு சின்ன விஷயங்கள் செய்தால் போதும் சில வாரங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

 இரவில் மசாஜ் :

எப்போதும் இரவுகளில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே இரவுகளில் புருவத்தை மசாஜ் செய்து எண்ணெய் தடவினால் விரைவில் பலனளிக்கும். இந்த குறிப்புகளை செய்வதற்கு முன் புருவ முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் வேர்கால்கள் தூண்டப்பட்டு, புருவம் வளர உதவும். அதன் பின் கீழே உள்ள குறிப்புகளை செய்து பாருங்கள்.

  வெங்காய சாறு :

வெங்காயத்தில் சல்ஃபர் அதிகமாக உள்ளது. சொட்டையான புருவத்திலும் முடி வளரச்செய்யும். இரவு தூங்குவதற்கு முன், புருவத்தை லேசாக கிள்ளி விட்டு, சின்ன வெங்காய சாறை சிறிது எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து புருவத்தில் தடவுங்கள். காலையில் கழுவுங்கள்.

முட்டை மஞ்சள் கரு :

முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து அதனை ஒரு பஞ்சினால் நனைத்து புருவத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

எலுமிச்சை துண்டு :

எலுமிச்சை துண்டை உங்கள் புருவத்தின் மீது வைத்து சில நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பின்னர் அதன் சாற்றினை தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

கற்றாழை :

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும். தினமும் தடவி வந்தால், ஒரே வாரத்தில் மாற்றம் காண்பீர்கள். பெட்ரோலியம் ஜெல்லி : வாசலின் அல்லது ஏதாவது ஒரு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து புருவத்தின் மீது தடவிவிட்டு படுங்கள். மறு நாள் காலை கழுவலாம். வாசலின் தகுந்த ஈரப்பதத்தை புருவத்திற்கு அளிக்கிறது. இதனால் பஅங்குள்ள தசைகள் ஊட்டம் பெறுகின்றன.

விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் :

விளக்கெண்ணெய் மற்றும் நல்லென்ணெய் சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை இரவில் தடவி அதன் ம்ல் ஐ ப்ரோ பென்சிலால் வரைந்தால், சில வாரங்களில் வரைந்த மாதிரியே புருவங்கள் அடர்த்தியாக கிடைக்கும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares