பெண்களின் மார்பகங்கள் எப்போதெல்லாம் பெரிதாகும் என தெரியுமா?..

பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் மார்பகங்கள், ஒருசில காலங்களில் பெரிதாகும். சில நேரங்களில் உணவுகளில் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் மற்றும் கர்ப்பம் போன்ற பெரிய மாற்றங்களின் போதும், பெண்களின் மார்பகங்கள் பெரிதாகும்.

நிறைய பெண்களுக்கு அழகிய, கவர்ச்சிகரமான மார்பகங்கள் வேண்டுமென ஆசை இருக்கும். இன்னும் சிலருக்கு அது வருத்தமாக இருக்கும். ஏனெனில் மிகப்பெரிய மார்பகங்கள் இருந்தால், அது பல நேரங்களில் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும்.

இங்கு பெண்களுக்கு எப்போதெல்லாம் மார்பகங்கள் பெரிதாகும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் எடை அதிகரிப்பது

சில பெண்களுக்கு, உடல் எடை அதிகரிக்கும் போது மார்பகங்களின் அளவும் மாறுபடும். ஏனெனில் எடை அதிகரிக்கும் போது, மார்பக திசுக்களில் உள்ள கொழுப்புத் திசுக்களின் அளவும் அதிகரிக்கும். அதேப்போல் எடை குறையும் போது, மார்பகங்களின் அளவும் குறையும்.

கர்ப்ப காலம்:

கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பகங்களின் அளவு அதிகரித்திருப்பது போன்று உணர்வார்கள். இதற்கு கர்ப்ப காலத்தில் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் காரணம். சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது, மார்பக பகுதியில் ஒருவித எரிச்சல், காயம் மற்றும் சிறு வீக்கம் போன்றவை ஏற்படும். இன்னும் சில பெண்களுக்கு, கர்ப்பத்தின் இறுதி காலத்திலும் அதிகரிக்கும்.

கருத்தடை பொருட்கள்

கருத்தடை மாத்திரைகளை எடுத்து வந்தாலும், மார்பகங்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் மார்பகங்களின் வளர்ச்சிக்கு காரணமான ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ளது.

பூப்படையும் காலம்:

பெண்கள் முதன் முறையாக பூப்பெய்யும் போது, உடலில் திடீரென ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், இக்காலத்தில் மார்பகங்களின் அளவில் மாறுபாடு ஏற்படும்.

உடலுறவு:

சில பெண்களுக்கு, உடலுறவில் ஈடுபடும் போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், மார்பகங்கள் பெரிதாகும். ஏனெனில் நரம்புகள் அப்போது தெளிவாக தெரியும் மற்றும் மார்பகங்கள் பெரிதாகும்.

மாதவிடாய் காலம்:

ஓவுலேசனுக்கு பின், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மார்பகங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மார்பகங்களை பெரிதாக காட்டும். சில நேரங்களில் மாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் நீர்த்தேக்கத்தால், மாதவிடாய் சுழற்சியின் போது மார்பகங்கள் பெரிதாக காணப்படும்.

ஆனால் மாதவிடாய் காலம் முடிந்த பின் பழைய நிலைக்கு திரும்பி விடும். ஒருவேளை திரும்பாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இறுதி மாதவிடாய்:

இறுதி மாதவிடாய்க்கு பின்னர், கொழுப்புச் செல்கள் வீங்கி, மார்பகங்களின் அளவை பெரிதாக்கும்

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares