சிவந்த உதடுக்கு பெறுவதற்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்க சில டிப்ஸ்!!

லிப்ஸ்டிக் போட்டு உதட்டினை அழகு படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ரசாயன பொருட்கள் அடங்கிய லிப்ஸ் டிக் அலர்ஜியை ஏற்படுத்தி உதடு புண்ணாகிவிடும்.

எனவே லிப்ஸ் டிக் உபயோகிப்பதற்கு அச்சப்படுபவர்கள் லிப் கிளாஸ் உபயோகிக்கலாம். இது உதட்டில் அடிக்கிற கலரில் இருக்காது ஆனாலும் உதடு அழகாக இருக்கும்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் கிளாஸ் வாங்குவதை விட வீட்டில் நாமே சிவந்த உதட்டிற்கு ஏற்ப லிப் கிளாஸ் தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

லிப் கிளாஸ் தயாரிக்க தேனிக்களின் மெழுகு, விளக்கெண்ணெய், பீட்ரூட் ஜூஸ், போதுமானது. 2 டேபிள் ஸ்பூன் தேனீக்களின் மெழுகை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றவும். உருகிய உடன் ஸ்டவ்வை நிறுத்திவிடவும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மிக் செய்து நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலக்கவும்.

இந்த கலவையில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவை சிவப்பு நிறத்தில் மினுமினுப்போடு வரும். அதிக அளவு நிறம் வேண்டும் என்பவர்கள் பீட்ரூட் சாறை அதிகரிக்கலாம். இயற்கை லிப் கிளாஸ் தயார். இந்த லிப் கிளாஸை சுத்தமான பாக்ஸ்சில் போட்டு குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.

இந்த லிப் க்ளாஸை ரெகுலராக அப்ளை செய்யலாம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இந்த லிப் க்ளாஸ் உடன் தேன், வென்னிலா எசன்ஸ் ஆகியவைகளை கலந்தால் வாசனையாகவும், உதட்டில் சுவையாகவும் இருக்கும்.

செந்நிற லிக் க்ளாஸ் வேண்டும் என்பவர்கள் ஸ்ட்ராபெரிஸ் பயன்படுத்தலாம். தேனி மெழுகு வேண்டாம் என்பவர்கள் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தியும் லிப் க்ளாஸ் தயாரிக்கலாம். வீட்டில் தயாரிக்கப்படும் லிப் க்ளாஸ் எப்பொழுதும் ப்ரிட்ஜில் குளியாகவே வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares