தலையில் உள்ள நரை முடியை தடுக்க கடுகு எண்ணெய் போதும்..

கடுகு எண்ணெய் வட இந்தியாவில் பிரசித்தமானது. நாம் நல்லெண்ணெய் சமையலுக்கும் தேய்த்து குளிப்பதற்கும் உபயோகிப்பது போல் அவர்கள் கடுகு எண்ணெயை உபயோகிப்பார்கள். மிகவும் குளிர் அங்கு இருப்பதால் சூட்டை தரும் வகையில் கடுகு எண்ணெயை அவர்கள் உபயோகிப்பார்கள். நாம் குளிர்ச்சியை வேண்டுமென நல்லெண்ணெயை உபயோகிக்கிறோம்

கடுகு எண்ணெய்:

சருமத்திற்கும் கூந்தலுக்கும் உபயோகித்தால் அழகு இன்னும் மெருகேறும். கூந்தல் பட்டுப்போன்று இருக்கும். எப்படி உபயோகிக்கலாம் எனப் பார்க்கலாம்.

நரை முடியை தடுக்க :

20 ப்ளஸ்களில் வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடு படுத்தி தலையில் மசாஜ் செய்து பாருங்கள். நரை முடி மறையும்.

கூந்தல் வளரச்சிக்கு :

இது சிறந்த முறையில் ஸ்கால்ப்பிற்கு ஊட்டம் அளிக்கிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்துப் பாருங்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

வறண்ட கூந்தலுக்கு :

கூந்தல் எப்போது வறண்டு ஜீவனில்லாமல் இருக்கிறதா? இது சிறந்த சாய்ஸ். இது அளிக்கும் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

பொடுகு நீங்க :

உங்கள் ஸ்கால்ப் பொடுகு அரிப்பினால் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்து குளித்துப் பாருங்கள். ஆரோக்கியமான ஸ்கால்ப் கிடைக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

அடர்த்தியான கூந்தல் கிடைக்க :

மெலிதான் கூந்தல் இருந்தால் நீங்கல் வாரம் மூன்று நாட்கள் கடுகு என்னெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளியுங்கள். அட்ர்த்தி அதிகரிக்கும்.

நுனிபிளவு அதிக ஏற்படுகிறதா?:

கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்னெயால் மசாஜ் செய்து பாருங்கள். குணம் பெற்று நுனி ஆரோக்கியமாக இருக்கும்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares