உங்க தொடையின் கீழ் கருப்பாக இருக்க?.கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்..

சிலருக்கு தொடையில் கருமையாக இருக்கும். குறிப்பாக குண்டாக இருப்பவர்களின் தொடைகள் அதிகம் உராய்வதாலும், இறுக்கமான உடைகளை அணிவதாலும், திடீர் ஹார்மோன் மாற்றங்களாலும், தொடையில் உள்ள சருமம் கருமையாகிறது. இருப்பினும் இப்படி கருமையாகும் தொடைச் சருமத்தை போக்கலாம். அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! அதுவும் ஒருசில எளிய இயற்கை பொருட்களைக் கொண்டே, தொடையில் உள்ள கருமையைப் போக்கலாம். சரி, இப்போது தொடையில் இருக்கும் கருமையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம். கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

 எலுமிச்சை சாறு :

எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சையை இரண்டாக வெட்டி, தொடையில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின் துணியால் அப்பகுதியை துடைத்துவிட்டு, ஆலிவ் ஆயில் தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால், தொடையில் உள்ள கருமை மறையும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப்:

எலுமிச்சை சாற்றினை தொடையில் தடவி, பின் சர்க்கரை கொண்டு மென்மையாக 15 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் தொடையில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி கருமையும் நீங்கும். இந்த செயல்முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

எலுமிச்சை சாறு, பால் பவுடர் மற்றும் தேன்:

1 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அத்துடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, தொடையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் தொடையில் இருக்கும் கருமை மறையும்.

ஓட்ஸ், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:

ஓட்ஸ் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி 15-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளதால், இது தொடையில் உள்ள கருமையை வேகமாக மறையச் செய்யும். சந்தனப் பவுடர் மற்றும் வெள்ளரிக்காய் சந்தனப் பவுடரை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் தொடையில் தடவி உலர வைத்து கழுவி வர, தொடை வெள்ளையாகும். ரோஸ் வாட்டர்,

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்:

இரவில் தூங்கும் முன், இந்த மூன்றையும் ஒரே அளவில் ஒன்றாக கலந்து, தொடையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள்

கடலை மாவு,  தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சளை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி உலர வைத்து கழுவி வர, தொடையில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, தொடை வெள்ளையாகும்.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares