முகத்தில் உள்ள முடிகளை நீக்க இவைகளை பின்பற்றவும்!

சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.

முகத்தில் முடிகள் தோன்ற காரணம்:

பெண்களுக்கு முகத்தில் முடிகள் தோன்ற முக்கிய காரணமாக அமைவது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை. பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது, இந்த இரண்டு வகை ஹார்மோன்களின் அளவிலும் மாறுபாடு ஏற்பட்டு, ஹார்மோன் சமநிலையின்மை தோன்றுகிறது. இதனால், சில நேரங்களில், ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு. சில பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும், முகத்தில் அடர்த்தியான முடிகள் உருவாவது உண்டு. இதற்கு சிறந்த தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், முகத்தில் முடிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க:

கருவி கொண்டு நீக்குதல்: முகத்தில் உருவாகும் முடிகளை, “ட்வீசர்’ என்னும் கருவி கொண்டு நீக்கும் முறையில், மிக விரைவாகவும், குறைவான விலையிலும் நீக்கலாம். போதிய வெளிச்சத்தில், முகத்தின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் காணப்படும் முடிகளை, “ட்வீசர்’ மூலம் எடுத்து விடலாம். அதன் பின், அந்த பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவத்தால் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய முறையால், அப்பகுதிகளில் எரிச்சல் உ<ண்டாகும் வாய்ப்பு உள்ளது.

Home Remedies to Remove Facial Hair

ஹேர் ரிமூவிங் கிரீம்:

ஏதேனும் பார்ட்டி அல்லது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசர நேரத்தில், மிக விரைவாக முடிகளை நீக்க, ஹேர் ரிமூவிங் கிரீம்கள் பயன்படுகின்றன. இந்த கிரீம்கள், கைகள், கால்கள் மற்றும் அக்குள் ஆகிய பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதில் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன், அவற்றால் அலர்ஜி ஏதேனும் ஏற்படுமா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

வாக்சிங்:

தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக பயன்படுத்தும் மிகப் பிரபலமான முறை வாக்சிங். ஏனென்றால், இதற்கு மிக குறைவாக செலவாவதுடன், மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பலன் அளிக்கிறது. வாக்சிங் செய்து முடித்த பின், செய்யப்பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதுடன்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரால், சருமத்தின் துளைகள் திறந்திருப்பதால், தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ப்ளீச்சிங்:

முகத்தில் முடிகள் தோன்றும் பிரச்னையை சமாளிக்க ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். ப்ளீச்சிங் செய்வதால், முகத்தில் காணப்படும் முடிகள் வெளுத்து, அவை எளிதில் மற்றவர்கள் பார்வைக்கு தெரியாது. ப்ளீச்சிங் சருமத்தை வறண்டு போக வைப்பதால், நல்ல மாய்ச்சரைசர் கிரீமை அப்ளை செய்ய வேண்டும்.

மருத்துவ முறைகள்:

எலக்ட்ரோலிசிஸ்: இந்த முறையில், ஊசியை தோலில் செலுத்தி, குறைந்த அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி, அதன் மூலம், முடிகளின் வேர் முடிச்சுகள் அழிக்கப்படுகிறது. ஆனால், இச்சிகிச்சை சிறியளவிலேயே பலன் தருவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

லேசர் சிகிச்சை: லேசர் முறையில், முகத்தில் தோன்றும் முடிகளை வலியின்றி நீக்கலாம். இதன் பலன் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு தடவை, நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் நீக்கப்படும். இச்சிகிச்சைக்கான செலவு அதிகம். இச்சிகிச்சையால் சில விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

English Summary: How to remove facial hair? Reasons of facial hair in women. Tips to remove your hair on face using facial treatment options. Other than home remedies there are parlour methods which includes bleaching stuff. Otherwise, there are medicinal treatments available to get rid of facial hairs such as electrolysis & laser treatments. It is not too late to try an option in removing the hairs from face to look beautiful.

Subscribe for Updates:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
Shares